Monday, April, 16, 2012
டைரக்டர் பாலா ஒரு கண்டிப்பான அப்பா மாதிரி, என்று நடிகை பூஜா கூறியுள்ளார். பாலா இயக்கத்தில் உருவான 'நான் கடவுள்' படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றவர் நடிகை பூஜா. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பாலா படத்தில் பூஜா நடிக்க உள்ளார். இதுபற்றி நடிகை பூஜா அளித்துள்ள பேட்டியில், பாலா சார் படத்தில் நடிப்பதற்கு பொறுமை வேண்டும். அவரைப் பொருத்தவரை ஒரு கண்டிப்பான அப்பா மாதிரி. பரீட்சை நேரத்தில்தான் மிரட்டுவார். மற்ற நேரங்களில் அவரே சாக்லெட், ஐஸ்கிரீமெல்லாம் வாங்கிக் கொடுப்பார், என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் பூஜா, தமிழ் சினிமா என்னை கைகழுவி விட்டது என்று சொல்ல முடியாது. நான் சொந்த வீடு கட்டி சந்தோஷமா இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் தமிழ் படங்கள்தான். அந்த நன்றியை நான் எப்போதும் நினைத்து கொண்டிருப்பேன். சினிமாவில் அதிர்ஷ்டமும் வேண்டும். அப்போதுதான் முதலிடத்திற்கு போக முடியும், என்று கூறியிருக்கிறார்.

Comments
Post a Comment