
தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்துக் கொண்டால் '3' படம் எப்படி? என்று தான் தங்களுக்குள் முதல் கேள்வியை கேட்டுக் கொள்கிறார்கள். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் '3' படத்திற்கு இரண்டு விமர்சனங்கள் வர தொடங்கி இருக்கின்றன. இன்னும் சில நாட்கள் சென்றால் படம் எப்படி என்பதற்கான விடை கிடைக்கும். இந்நிலையில் கௌதம் மேனன், தனுஷ் இருவருமே நேற்று சந்தித்து பேசி இருக்கிறார்கள். கௌதம் மேனன் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வருகிறார் அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து 'யோஹன்' படத்தினை இயக்க இருக்கிறார். '3' படத்தினை தொடர்ந்து இந்தி படத்திலும், தமிழில் பரத்பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், இருவருமே தங்களது முந்தைய ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் யார், வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்திற்கு ஒருவர் மட்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆம். இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்!
Comments
Post a Comment