தனுஷுடன் இணையும் பார்வதி மேனன்!!!

Saturday, April, 07, 2012
தனுஷ் - பார்வதி மேனன் ஜோடியாக நடிக்கும் படத்தை புதிய இயக்குநர் பாரத் பாலா இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் தயாராக உள்ளது.

இவ்வளவும், சரி பார்வதி மேனன் யார் என்று நீங்கள் கேட்கலாம்.. ஸ்ரீகாந்த் நடித்து வெளியான பூ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தேசிய விருது பெற்ற நடிகைதான் பார்வதி மேனன். ஆமாம்.. புதிய இயக்குநர் பாரத் பாலா பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று அடுத்த கேள்வி நீங்கள் கேட்பதற்குள் நாங்களே சொல்லி விடுகிறோம்.

1997ம் ஆண்டு இந்தியாவின் 50வது சுதந்திரத் தின விழாக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் பாடி வெளியான வந்தேமாதரம் பாடலை இயக்கியவர்தான் இந்த பாரத் பாலா.

அறிமுகங்கள் முடிந்துவிட்டதா. இப்போது விஷயத்திற்கு வரலாம்.

இந்த படக்குழுவினருடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று தனுஷ் கூற, இப்படத்தில் உங்கள் கதாநாயகி பற்றி என்ன கூறு விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க வேண்டும் என்பது இயக்குநரின் விருப்பம். அவரது வேலையில் நான் தலையிட விரும்ப மாட்டேன் என்றார் பளிச்சென்று.

Comments