ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்...எதையும் நானே பேஸ் பண்ணுவேன்!- தனுஷ்!!!

Thursday, April, 19, 2012
3 பட வெளியீடு மற்றும் வர்த்தகத்தில் ரஜினிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையில், அவர் பெயரை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுவது எந்த வகையிலும் நியாயமற்றது, ஏற்க முடியாதது, என்றார் நடிகர் தனுஷ்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா நடித்த 3 படத்தை தெலுங்கில் வெளியிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, அதன் வெளியீட்டாளர் நட்டி குமாருக்கு ரஜினி நஷ்ட ஈடு தருவார் என செய்தி வெளியானது.

இதற்கு உடனடியாக தன் கைப்பட எழுதிய அறிக்கையில் மறுப்பு தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷும் தன் பங்குக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, இட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்," என்றார்.

இப்போது 3 படத்தை இந்தியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியை, கமல் சொன்ன அட்வைஸ்படி ஷார்ப்பாக எடிட் பண்ணி வெளியிடுகிறாராம்.

இதுகுறித்துக் கூறுகையில், "கமல் சொன்ன சில யோசனைகளின்படி இரண்டாம் பாதியை எடிட் செய்து வருகிறேன். இந்தியில் நிச்சயம் நான் நினைத்தபடி இந்தப் படம் போகும்," என்றார்.

Comments