கான்களை நம்பி என் படம் இல்லை - கமல்ஹாசன்!!!

Monday, April 02, 2012
கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் மற்றும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் ஆகியோர் நடிக்க போவதாக வந்த செய்தியை கமல்ஹாசன் மறுத்துள்ளார். தற்போது கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். இதற்கு அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய ஆகிய 3 ‌மொழியிலும் உருவாக இருக்கும் அமர் ஹாய் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதை ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.

அமர் ஹாய் படம் குறித்து கமல் கூறுகையில், இந்தபடத்திற்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஆனால் இதற்கு கான்கள் பொருத்தமானவர்கள் அல்ல. அப்படியே ஒரு வேடம் இருந்தால் அதற்கு சைப் மற்றும் தான் பொருந்துவார். ஆனால் அவரிடம் இதுப்பற்றி இன்னும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய அடுத்த படத்தில் ஜாக்கி சான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் நடிக்க போவதாக வந்த செய்தியையும் கமல் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில் நடந்த தசாவதாரம் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் தான் ஜாக்கி சானை நான் சந்தித்தேன். தயாரிப்பாளர் தான் எங்கள் இருவரையும் வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார். ஆனால் எனக்கு ஜாக்கி சான், டாம் குரூஸ் ஆகியோருடன் சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லை. அதேபோல் பாலிவுட் நடிகர்கள் கான்களுடன் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அவர்களை நம்பி என்னுடைய படம் இல்லை. என்னுடைய படங்களுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அப்படியே என்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அது ஒருவருக்கு தான். அவர் இந்தி நடிகர் திலீப் குமார் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

Comments