இயக்குநரின் 'செல்லம்' தமன்னா!!!

Monday, April 16, 2012
ஏனென்றால் காதல் என்பேன்... - இது தமிழ் சினிமாவின் செல்லமாக இருந்து இப்போது தெலுங்கு சினிமா செல்லமாகிவிட்ட தமன்னாவின் புதிய படம்

தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்துக்காக ஞாயிற்றுக்கிழமை பிரஸ் மீட் வைத்திருந்தார் நிகில் முருகன்.

ரொம்ப நாளாக சென்னைப் பக்கமே எட்டிப் பார்க்காத தமன்னா நேற்று கிரீன் பார்க்கில் 'தரிசனம்' தந்தார். கொளுத்தும் கோடையில் காஷ்மீரிலிருந்து வந்த ஐஸ் மாதிரி ஜில்லென்றிருந்தார்.

ஆள் மட்டுமல்ல, பேச்சும் செ ஜில்... முழுக்க முழுக்க தமிழில் அவர் பேச, போட்டோகிராபர்களை விட நிருபர்கள்தான் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

"நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்புதான் என்னை முதலில் வரவேற்றது," என தமன்னா ஆரம்பிக்க, விசிலடிக்காத குறைதான்!

தமன்னா பேச்சில் 'அன்பு' தொடர்ந்தது...

"பையா படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்தபோதும், அந்த அன்பு என்னை தழுவியது. இப்போதும் அதே அன்பு என்னைத் தழுவுகிறது.

நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம். கருணாகரன் என்னை, 'செல்லம்' என்றுதான் அழைப்பார். அந்த 'செல்லம்' என்ற வார்த்தையில், அத்தனை அன்பு இருக்கும்.

இந்த படத்தின் கதாநாயகன் ராமிடம், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கற்றுக்கொண்டேன்,'' என்றார்.

படத்தின் கதாநாயகன் ராம், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, சரவணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கருணாகரன், பட அதிபர்கள் ரவி கிஷோர், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரோ ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியை, நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.

யாரோ ஒரு டிவி தொகுப்பாளினி கெக்கே பிக்கேவென சிரித்தபடி, தமிழை மென்று துப்பி நிகழ்ச்சியைத் தொகுப்பதைவிட, நிகில் தொகுப்பது மி்க சிறப்பாக உள்ளது. இதை தயவு செய்து தொடருங்கள் நிகில்!

Comments