படு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்... தப்பான நினைப்போட என்கிட்ட வராதீங்க - அஜீத் ஹீரோயின்!!!

Saturday, April, 28, 2012
அஜீத் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டனுக்கு ஏக முன் ஜாக்கிரதை. நடித்த முதல் படமே இன்னும் ரிலீசாகவில்லை. ஆனால் அதற்குள் அவர் ஒரு பலே கண்டிஷன் போட்டுள்ளார்.

அது, "படுகவர்ச்சியாக நடிப்பேன் என்ன நினைப்பிலோ அல்லது தவறான கண்ணோட்டத்துடனோ என்னை யாரும் அணுக வேண்டாம்," என்பதுதான்.

உலக அழகி போட்டியில் இரண்டாவது இடம் பெற்ற பார்வதி ஓமனகுட்டன், 'பில்லா-2' படத்தின் மூலம் சினிமா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தில் இவர்தான் அஜீத்துக்கு ஜோடி.

'பில்லா-2' ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்வதி ஓமனகுட்டன் கூறுகையில், "முதல் படத்திலேயே அஜீத் ஜோடியாக நடித்தது மிகப்பெரிய பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என் முதல் படமே திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.

அஜீத்தை சந்திப்பதற்கு முன்பு அவர் ஒரு பந்தா பார்ட்டியாக இருப்பார் என்று நினைத்தேன். பழகிய பிறகுதான் தெரிந்தது, அவர் எவ்வளவு எளிமையானவர் என்று. அவர் ஒரு உதாரணமான மனிதர். நான், அவருடைய மனைவி ஷாலினியின் தீவிர ரசிகை. இதை அவரிடம் சொன்னபோது, அவரும் ஷாலினியின் ரசிகராக இருந்தவர் என்று தெரியவந்தது. அவர் ரசித்த பெண்ணே வாழ்க்கை துணையாக வந்ததற்காக, நான் அவருக்கு வாழ்த்து சொன்னேன்.

'பில்லா-2' படத்தின் கதையை என்னிடம் கேட்காதீர்கள். அதைச் சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும். அஜீத்துக்கு ஜோடியாக, படத்தின் கதையை திசை திருப்பும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கும் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

பார்வதி ஓமனகுட்டன் உலக அழகி என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டுவார் என்ற தவறான கண்ணோட்டத்துடன் யாரும் என்னை அணுக வேண்டாம். நான் நடிக்கிற வேடத்துக்கு எந்த அளவுக்கு கவர்ச்சியும், நெருக்கமும் தேவைப்படுகிறதோ, அதை நான் தயங்காமல் செய்வேன்.

நடிப்பு திறனை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரம் அமைந்து, அந்த கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவைப்பட்டால், நிச்சயம் செய்வேன்.

மிக சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். எவ்வளவு கனமான கதாபாத்திரம் என்றாலும் பார்வதி ஓமனகுட்டன் வெளுத்துக் கட்டுவார் என்ற பெயர் வாங்க வேண்டும். நான் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டு. சிறந்த நடிகையாவதற்காக இரவு-பகலாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

Comments