சினிமா தாண்டி நானும் சல்மானும் அவ்வளவு நெருக்கம்... - சொல்கிறார் அசின்!!!

Friday, April, 06, 2012
சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின்.

சல்மான் - அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன.

அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட செய்தி உண்டு. ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின்.

இந்த நிலையில் இப்போது, தங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் கச்சிதமாக வரக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அவர் தந்துள்ளார்.

அசின் கூறுகையில், "நிஜத்திலும் இணக்கான மனநிலை இருந்தால்தான் திரையில் ஜோடிப் பொருத்தம் சரியாக வரும். எனக்கும் சல்மானுக்கு வெளியிலும் நல்ல உறவு உள்ளது. அதுதான் நட்பு. வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம். சல்மானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு.

அவரது அந்த நகைச்சுவையை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன். நாங்கள் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அதுதான் எங்களை நல்ல ஜோடியாக திரையில் காட்ட உதவுகிறது," என்றார்.

நெருக்கம், நல்ல புரிதல், ஜோடிப் பொருத்தம்... எல்லாமே நட்புதானா? என்னமோ போங்க..!

Comments