கோச்சடையானை மறுத்த ஏ.வி.எம்.!!!

Wednesday,April,25,2012
'கோச்சடையான்' படப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ரஜினி. இப்படத்தினை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு இப்படத்தை சௌந்தர்யா தயாரிப்பதில் துளிகூட இஷ்டம் இல்லையாம். அதனால் 'கோச்சடையான்' படத்தினை எப்படியாவது கைமாற்றி விட வேண்டும் என்று துடிக்கிறாராம். ரஜினி 'முதலாளி' என்று அழைப்பது ஏ.வி.எம். சரவணனை மட்டும் தான். அவரைப் பார்க்க வேண்டும் என்றால் உடனே காரை எடுத்துக் கொண்டு நேரடியாக ஏ.வி.எம். ஸ்டூடியோவிற்கு சென்று விடுவது ரஜினியின் பழக்கம். கேரளாவில் 'கோச்சடையான்' படப்பிடிப்பிற்கு கிளம்பும் சில நாட்களுக்கு முன்பு ஏ.வி.எம். சரவணனை சந்திக்க சென்றாராம் ரஜினி. 'கோச்சடையான்' படத்தயாரிப்பை அப்படியே கை மாற்றிவிட ஏ.வி.எம். சரவணனிடம் பேசினாராம். "சினிமா நிலவரம் சரியில்லை ரஜினி. அதனால் சினிமா தயாரிக்கும் மனநிலையில நாங்கள் இல்லை. நீங்களே வலியவந்து கேட்டும் என்னால் செய்ய முடியவில்லை... ஸாரி ரஜினி" என்று சொல்லி விட்டாராம் சரவணன்.

Comments