சென்னையில் அமிதாப்பைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ரஜினி!!!

Tuesday, April, 03, 2012
சென்னை வந்துள்ள பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

5 வது ஐபிஎல் போட்டி தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னைக்கு இரு தினங்களுக்கு முன் வந்தார் அமிதாப் பச்சன்.

நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவரை, அந்த ஹோட்டலுக்கே சென்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்.

சமீபத்தில்தான் வயிற்று வலிக்காக அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரை நலம் விசாரித்து, மரியாதை செய்யும் விதமாக ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டார்.

இதுகுறித்து அமிதாப் தனது ட்விட்டரில், "ரஜினி இன்று என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்திருந்தார். அவர் உடல்நலம் பெற்றுவிட்டது தெரிந்தது. கடவுளுக்கு நன்றி. அவருடன் நேரத்தைச் செலவிடுவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் ("Rajini pays me a visit in my room! Looks recovered from his recent illness. Thank God! Always a delight to spend time with him!")," என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, அவர் மீது மிகுந்த அக்கறை காட்டிய அமிதாப், அவரை சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரைத்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது நினைவிருக்கலாம்.

Comments