Wednesday,April,25,2012
மும்பை படவுலகில் எலியும், பூனையுமாக இருந்த நடிகைகள் கேத்ரினா கைப்பும், சோனக்ஷி சின்ஹாவும் சந்தித்து திடீர் நெருக்கம் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சோனக்ஷி சின்ஹா சில நாட்களுக்கு முன்பு நடிகை கேத்ரினா கைப்பை கடுமையாக விமர்சித்திருந்தார். பின்னர் சுமுக உறவை ஏற்படுத்துவதற்காக அவருக்கு நலம் விசாரித்து மெசேஜ் அனுப்பினார். ஆனால் அதற்கு கேத்ரினா எந்த ரியாக்ஷ னும் காட்டவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் சோகைல்கான் இல்ல விழாவில் இருவரும் சந்தித்தனர். அப்போது கட்டியணைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இதில் என்ன விசேஷம் என்றால் இருவரது மோதலுக்கு காரணமான நடிகர் சல்மான்கான் அந்த விழாவில் கலந்து கொண்டதுதான். இருவரும் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தது விழாவுக்கு வந்த தயாரிப்பாளர்கள், சக நடிகர், நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியது.
நடிகை சோனக்ஷி சின்ஹா, நடிகர் சல்மான்கானுடன் ‘தபங்க்’ படத்தில் நடித்ததில் இருந்து கைப்பும், சோனக்ஷியும் நேருக்கு நேர் சந்திப்பதையே தவிர்த்து விட்டனர். பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்தனர். தற்போது இருவரும் ஒட்டிக் கொண்டது மும்பை படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கைப்பின் தோழி கூறுகையில், ‘‘இருவரும் இணைய என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும். நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்திப் படவுலகின் இரு பெரும் நடிகைகளை இணைந்து பார்ப்பது மகிழ்ச்சி யாகத் தானே இருக்கிறது’’ என்றார்.

Comments
Post a Comment