நயன்தாராவின் மாஸ்டர் ப்ளான்!!!

Sunday, April, 08, 2012
சென்னை::தனது காதல் விவகாரத்தை நாளுக்கு நாள் பூதாகரமாக்கி வருவதில் இங்குள்ள மேனேஜர் ஒருவருக்கும் அவரது சிச்யகோடி ஒருவருக்கும் பெருத்த பங்கிருப்பதாக சந்தேகப்படுகிறாராம் நயன்தாரா. அவரை காதலிக்கிறார், இவரை காதலிக்கிறார் என்றெல்லாம் கொளுத்திப் போடுவதும் மேற்படி நபர்களான இருவரும்தானாம். சந்தர்ப்பம் வரும்போது வைத்துக் கொள்கிறேன் அவர்களை என்று அனல் கக்குகிறாராம் நயன். இதற்கிடையில் இன்னொரு தகவலும் உலா வருகிறது கோடம்பாக்கத்தில். பிரபுதேவா- நயன்தாரா ஃபைட்டே ஒரு நாடகம்தான் என்கிறார்கள் அவர்கள். இதென்னங்க புது பொம்மலாட்டமா இருக்கு? ஆமாம்... நயன்தாராவின் பேங்க் பேலன்ஸ், மன்னாரன் கம்பெனி பைனான்ஸ் நிறுவனம் லெவலுக்கு இறங்கி போயிருக்கிறதாம். இப்போதைக்கு நடிப்பில் இறங்கி பத்து இருபது கோடியை தேற்றினால்தான் உண்டு என்பதாலும், பிரபுதேவாவுடனான உறவு தொடர்கிற பட்சத்தில் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதாலும் இருவரும் டிராமா ஆடுவதாக கிசுகிசுக்கிறார்கள். 'நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன்..'னு ரெண்டு பேரும் சேர்ந்து கல்லா கட்டிக்கிடலாம் போட்ட ப்ளான்தான் இது! ஓ... எப்டியெல்லாம் ப்ளான் போடுறாங்கய்யா..... பொழச்சிக்கிட்டா சரி... புட்டுக்கிட்டா...?!

Comments