
சிம்பு, தனுஷ், பிரபுதேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் கொஞ்ச நாள் கோடம்பாக்கம் பக்கமே வராமலிருந்து, மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள நயன்தாராதான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் நாயகி.
தயாரிப்பாளர்கள் தரும் வரவேற்பு, கொடுக்கத் தயாராக இருக்கும் சம்பளம் மற்றும் ரசிகர்களின் ஆர்வம் என பல வகையிலும் நயன்தாரா பக்கமே தராசு சாய்வதால், அவருக்கு இந்த அந்தஸ்து கிட்டியுள்ளது.
நயன்தாராவுக்கு இன்றைய தேதியில் சம்பளம் ரூ 1.5 முதல் 1.75 கோடி என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.
இவரோடு ஒப்பிட்டால், இன்றுள்ள மற்ற நடிகைகள் பலரும் எங்கேயோ இருக்கிறார்கள்.
இவருக்கு அடுத்த நிலையில் அனுஷ்கா, காஜல் அகர்வால் மற்றும் தமன்னா ஆகியோர் உள்ளனர். த்ரிஷாவும் இந்த முதல் நிலை நாயகிகள் லிஸ்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது, இவர்கள் சம்பளம் ரூ 1 முதல் 1.2 கோடி வரை போகிறது.
அமலா பால் எப்போது இந்த கோடீஸ்வர நடிகைகள் பட்டியலுக்கு வருவது என துடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு படம், ஒரே ஒரு படம் ஓடிவிட்டால், அவர் தயங்காமல் ஒற்றை விரலைக் காட்டிவிடுவார்!
Comments
Post a Comment