பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி திருமணம்!!!

Monday, April 16, 2012
பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (36). இவர் ஆலிவுட் நடிகர் பிராட் பிட் (48) என்பவரை கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகிறார். இந்த ஜோடி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர்களது குழந்தைகள் விரும்பினர். அதை தொடர்ந்து காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது பிவெர்லி கில்ஸ் பகுதியைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் ராபர்ட் புரோகாப் தயாரித்த வைர மோதிரத்தை ஏஞ்சலினா ஜோலிக்கு அணிவித்தார். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சமாகும்.

திருமணம் நடைபெறும் தகவலை பிராட் பிட் செய்தி தொடர்பாளர் சினிதியா பெட்-டான்டே உறுதி செய்தார். திருமணம் எப்போது? எங்கு நடைபெறும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

ஏஞ்சலினா ஜோலி- பிராட்பிட் திருமணம் குறித்து அவர்களின் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments