Saturday, April, 21, 2012
சுந்தர் சி. இயக்கும் புதிய படம் கலகலப்பு. இதில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.
கலகலப்பு படத்தில் அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்கள் அரை குறை ஆடையில் தோன்றும் படங்கள் சமீபத்தில் வெளியாகி திரையுலகினரை அதிர வைத்தது. விழாவில் நடிகை அஞ்சலியிடம் இதுபற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-
கவர்ச்சி என்பது மீனா காலத்தில் இருந்து இருக்கிறது. அழகாக காட்டுவது தான் கவர்ச்சி எனக்கு படத்தில் நல்ல ரோல்.. ஒரு பாடல் காட்சியில் அது போல் நடிக்க வேண்டிய இருந்ததால் நடித்தேன். அது தவறல்ல. இது வித்தியாசமான கல கலப்பான படம். நான் கலர்புல் நாயகியாக வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் சுந்தர் சி. கூறும் போது பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் கேட்டேன். அவர்கள் சம்மதித்தனர். அதற்கான உடைகளை கூட அவர்களே தயார் செய்தார்கள். ஒவ்வொருத்தரும் கதையை உருவாக்கும் போது கேரக்டர்களுக்கு அந்தந்த நடிகர்களை கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.
இந்த படத்துக்கு நான் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று கதையை உருவாக்கிய போது நினைத்தேனோ அவர்களெல்லாம் கிடைத்தனர். சிறு கேரக்டரில் நடித்தவர்கள் கூட சிறப்பாக நடித்துள்ளனர் என்றார்.
நடிகர்கள் விமல், சிவா, நடிகை ஓவியா, இசையமைப்பாளர் விஜய் எபிநேசர், ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோரும் பேசினர்.

Comments
Post a Comment