இளம் ஹீரோக்கள்தான் எனக்கு நண்பர்கள்: அவர்களுடன் சுற்றுவதை நிறுத்த மாட்டேன்’ என்கிறார் எமி ஜாக்ஸன்!!!

Friday, April, 13, 2012
இளம் ஹீரோக்கள்தான் எனக்கு நண்பர்கள். அவர்களுடன் சுற்றுவதை நிறுத்த மாட்டேன்’ என்கிறார் எமி ஜாக்ஸன். ‘மதராச பட்டணம்’ படத்தில் நடித்தவர் எமி ஜாக்ஸன். அவர் கூறியதாவது: பழைய மெட்ராஸ், புதிய சென்னை இரண்டையுமே நான் பார்த்துவிட்டேன். எனது முதல் படமான ‘மதராச பட்டணம்’ சுதந்திரத்துக்கு முந்தைய கதை என்பதால் பழைய மெட்ராஸ் எப்படி இருக்கும் என்பதை தத்ரூமாக செட் அமைத்தார்கள். அங்கு நடித்துவிட்டு சிட்டிக்குள் சென்றால் முற்றிலும் புதிய சிட்டிக்குள் வந்ததுபோல் உணர்வேன். தமிழ் எனக்கு வேற்றுமொழியாக இருந்தாலும் அதில் நடிக்க வந்தபோது இயக்குனரும், பட யூனிட்டாரும் தந்த ஆதரவு என்னை படத்தோடு ஒன்ற வைத்தது. இதற்கு முன்பு வெளிநாட்டு நடிகை ஒருவர் கோலிவுட் படத்தில் நடித்திருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. அதேநேரத்தில் வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டது சந்தோஷம்.

இந்தியில் ‘ஏக் திவான தா’ படத்தில் நடித்தேன். தற்போது ‘தாண்டவம்’ படத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சமூக அமைப்புகளில் எனக்கு ஆர்வம் உண்டு. திரையுலகம் மற்றும் வேறு துறையிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர்கள் எல்லாருமே இளம் நடிகர்கள்தான். அவர்களுடன் மட்டுமல்ல, மற்ற துறை நண்பர்களுடனும் வெளியில் சுற்றுவதை விரும்புகிறேன். ‘இளம் நடிகர்களுடன் மட்டும் பழகுவது ஏன்?’ என்று கேட்கிறார்கள். அவர்களுடன்தான் நான் நடிக்கிறேன். அவர்களிடம் பழகாமல் எப்படி நடிப்பது? கோலிவுட்டை பொறுத்தவரை எனக்கு இப்போதைய நண்பர் ஆர்யா மற்றும் மதராச பட்டணம் டீம்தான். இவ்வாறு எமி ஜாக்ஸன் கூறினார்.

Comments