அஸ்க லஸ்க விஜய் தனுஷ்...?!!!

Monday, April, 09, 2012
சென்னை::கௌதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து யோஹான் அத்தியாயம் ஒன்று என்ற படத்திற்கு போட்டோ ஷூட் எல்லாம் எடுத்துவிட்டார். ஆனால் மேற்கொண்டு அதை பற்றிய எவ்வித தகவலும் வெளியிடாமல் இருப்பதால் அந்த படம் மறுபடியும் துவங்கப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் மெகா வசூல் சாதனை படைத்ததாகக் கூறப்படும் 3 படத்தில் நடித்த நடிகர் தனுஷை வைத்து கௌதம் மேனன் படம் இயக்கவிருப்பதாக தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் யாரிடமிருந்தும் வெளிவரவில்லை.

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது. தனுஷ் இந்தியில் நடிக்கும் ரஞ்சனா படத்தின் படப்பிடிப்பு இனி தான் ஆரம்பிக்கப் போகிறது.

கௌதம் மேனன் படத்தில் நடிக்காமல் முருகதாஸ் படத்தில் நடிக்கச் சென்ற நடிகர் விஜய்யின் படம் ஆரம்பிக்கப்படுமா? இல்லை ’3’ படத்தில் கௌதம் மேனன் படத்திற்கு பொருத்தமாக நடித்த தனுஷ் படம் ஆரம்பிக்கப்படுமா? என்பது ரசிகர்கள் மனதில் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

Comments