ஊனமுற்றோருக்கு நிதி திரட்ட நடிகர், நடிகைகள் ஆடை அலங்கார அணி வகுப்பு!!!

Monday, April, 16, 2012
ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்ட நடிகர்-நடிகைகளின் ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி கிண்டி லீமெரிடியன் ஓட்டலில் நடந்தது. தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா நெபர்டரி அமைப்பு மூலம் இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

நடிகர்-நடிகைகள் கண்கவரும் உடையுடன் மேடையில் தோன்றினர். மாடல் அழகிகளும் அணி வகுத்தார்கள் நடிகர்கள் ஆர்யா, ஜீவா, சித்தார்த், மகத், ஷர்வானந்த் ஆகியோர் விதவிதமான தோற்றங்களில் தோன்றினர்.

நடிகைகள் பார்வதி ஒமனகுட்டன், டாப்சி, பூஜாஹெக்டே, இந்தி நடிகை நர்கிஸ் ஆகியோர் கவர்ச்சி ஆடைகளில் அணிவகுத்து ரசிகர்கள் கவர்ந்தனர். சோனியா அகர்வாலும் அணி வகுப்பில் பங்கேற்றார். மத்திய மந்திரி மு.க. அழகிரி, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Comments