நயன்தாரா பேட்டியால் பிரபுதேவா அதிர்ச்சி!!

Monday, April 02, 2012
காதலித்தபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் பிரபுதேவா அப்படி இல்லை என்ற தொனியில் நயன்தாரா நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். இதனால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்துள்ளார். பதிலுக்கு அவரும் இது பற்றி பேச முடிவு செய்துள்ளாராம். பிரபுதேவா-நயன்தாரா கடந்த 2 வருடத்துக்கும் மேலாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து மனைவி ரமலத்திடமிருந்து பிரபுதேவா முறைப்படி விவாகரத்து பெற்றார். கிறிஸ்தவ மதத்திலிருந்து நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார்.

ஆனால் பிரபுதேவா படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்தார். திருமண நாளை எதிர்நோக்கி நயன்தாரா படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டார். ஸ்ரீராமராஜ்யம் என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்காக காத்திருந்த வேளையில் அவ்வப்போது காதல் ஜோடிக்கு இடையே சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுடன் பிரபுதேவா தொடர்பு வைத்திருக்கிறார் என்ற கிசுகிசுவும் நயன்தாராவுக்கு கோபத்தை உண்டாக்கியது.

இதற்கிடையில் பிரபுதேவா தனது முதல் மனைவியின் குழந்தைகளுடன் பாசமாக பழகிவந்தார். நயன்தாராவுக்கு தெரியாமல் அவர்களை ஷாப்பிங் அழைத்து செல்வது, வெளிநாடுகளுக்கு டூர் செல்வது என்று சந்தோஷமாக இருந்தார். இதுவும் நயனை கோபப்படுத்தியது. மேலும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதர் என்ற மேற்கத்திய பாணியில் சேர்ந்து வாழலாம் என்று பிரபுதேவா யோசனை கூறினாராம். அதை நயன்தாரா ஏற்கவில்லை.

விரைவில் திருமண தேதி அறிவிப்பார் என்று காத்திருந்த நயன்தாராவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பிரபுதேவாவை பிரிந்தார். இந்நிலையில், காதலில் நான் 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அவர் (பிரபுதேவா)அப்படி இல்லை என்ற தொனியில் நேற்று பேட்டி அளித்தார். இது பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். எனவே நயனுக்கு பதிலடி தரும் வகையில், இதற்கு பதிலளிக்க விரைவில் வாய் திறக்க உள்ளாராம் பிரபுதேவா.

Comments