
தமிழ் திரையுலகில் பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் தமிழில் டப் ஆகி வெளியாவது அதிகரித்துள்ளது. வழக்கமாக கன்னட படங்கள் சென்னையில் ரிலீஸ் ஆவது அரிது. தமிழ் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்யவே அங்கே ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இடையில் தமிழ் படங்களை ரிலீஸ் செய்ய தடை கூட விதித்தார்கள். பேச்சுவார்த்தைகளுக்கு பின் அந்த தடை நீக்கப்பட்டது. ஆனால் இப்போது நிலை தலைகீழ். சுதீப் நடித்த கன்னட படம், Ôஜஸ்ட் மாட் மாடல்லிÕ தமிழில் டப் ஆக உள்ளது. இதேபோல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தெலுங்கு படங்கள் அடுத்தடுத்து தமிழில் டப் ஆக¤ வருகிறது. நயன்தாரா, பாலகிருஷ்ணா நடித்த Ôஸ்ரீராம ராஜ்யம்Õ, ராம்சரண் தேஜா, தமன்னா நடித்துள்ள படம் ÔரகளைÕ என்ற பெயரிலும் சித்தார்த், ஹன்சிகா நடித்த படம் Ôஸ்ரீதர்Õ, சமந்தா நடித்த ÔஈகாÕ, Ôநான் ஈÕ என்ற பெயரிலும் டப் ஆகிறது. இது தவிர த்ரிஷா, கார்த்திகா, ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள Ôதம்முÕ படமும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர். தயாரிப்பாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக, தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று மொழி படங்களை டப் செய்து திரையிடுவதில் தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Comments
Post a Comment