இளம் அம்மா, ஆன்ட்டி ரோலா... ரோஜா ரெடி!!!

Tuesday, April 10, 2012
அரசியலில் நினைத்தது ஒன்றும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. பதவி வரும்போது வரட்டும், இப்போதைக்கு தனக்கு மிகவும் பரிச்சயமான சினிமாவிலிருந்தால் நாலு காசாவது பார்க்கலாம் என்று நினைத்து, நடிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நடிகை ரோஜா.

ஏற்கெனவே அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இப்போது பாரதிராஜாவின் அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து முழு வீச்சில் சினிமாவில் நடிக்கப் போகிறாராம்.

இந்தப் படம் தவிர, கார்த்தி - ப்ரணீதா நடிக்கும் சகுனியில் வக்கீல் வேடத்தில் வருகிறாராம் ரோஜா.

இவை தவிர இன்னும் மூன்று படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், "அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அருமையான கிராமத்து அம்மா வேடம். கார்த்திகா எனக்கு பெண்ணாக நடிக்கிறார். பாரதி ராஜா படம் வேறு. மிகுந்த மன திருப்தியுடன் நடிக்கிறேன்.

அடுத்தது கார்த்தி - ப்ரணிதா நடிக்கும் சகுனியில் வக்கீலாக வருகிறேன். இந்த இரண்டாவது சுற்று ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளது," என்றார்.

விரைவில் ஸ்ரீராமராஜ்யம் படம் வேறு தமிழில் வரவிருக்கிறது. இதில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார் ரோஜா.

ரோஜாவின் வரவு, இளம் அம்மா நடிகைகளுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்!

Comments