பிசியான ஸ்டார்களை தேடிப்போக மாட்டேன்!!!

Tuesday, April 10, 2012
பிசி ஸ்டார்களை தேடிப் போவதில்லை என்றார் செல்வராகவன். ‘மயக்கம் என்ன?' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம்Õ. ஆர்யா, அனுஷ்கா நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கோவாவில் 15 நாட்கள் நடந்தது. ஒரு மாதத்துக்குமேல் திட்டமிடப்பட்டிருந்த ஷூட்டிங் திரையுலக ஸ்டிரைக்கால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பட குழுவினர் சென்னை திரும்பினர். இதில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர். ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதுபற்றி செல்வராகவன் கூறும்போது, ‘Ôஆர்யா, அனுஷ்கா இருவருமே தொழில் ரீதியான நடிகர்கள் என்பதால் காட்சிகள் படமாக்குவதில் சிரமம் இல்லை. இருவரும் எந்த தலையீடும் செய்யவில்லை. 35 சதவீத ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இரண்டு முன்னணி ஸ்டார்கள் தவிர பிஸியாக இருக்கும் வேறு யாரையும் இப்படத்திற்கு தேர்வு செய்யவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் பிஸி கிடையாது. இப்போது அவரும் பிஸி என்பதால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள்தான். நான் எப்போதுமே பிசியான ஸ்டார்களை தேடிப்போவதில்லை' என்றார்.

Comments