Tuesday, April, 17, 2012
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கும், அவரது காதலியும் பின்னணி பாடகியுமான சைந்தவிக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனான ஜீ.வி.பிரகாஷ் குமார் இப்போது தமிழ் சினிமாவின் பெரிய இசையமைப்பாளர்கள் பட்டியலில் உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மொழி தாண்டி இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவர் இசையமைத்து வெளிவந்த 'ஆடுகளம்', 'தெய்வத்திருமகள்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' போன்ற ஹிட் படங்களை கொடுத்த வெற்றியாளர் தற்போது திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். இவரும், பிரபல பின்னணி பாடகி சைந்தவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதனால் சீக்கிரத்தில் திருமணம் நடத்த நாள் பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதுகுறித்து ஜீ.வி.யிடம் கேட்டபோது, இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்கள் முடிக்க வேண்டியுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்ய நாள் பார்த்து கொண்டிருக்கின்றனர். திருமண தேதி முடிவானதும் விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment