கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,April,11,2012
*இளையராஜா இசையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் ‘நீ தானே என் பொன்வசந்தம்’. இப்படத்துக்கு தமிழ், தெலுங்கு இருமொழிக்கும் சேர்த்து பாடகர் கார்த்திக் குரலில் லண்டனில் பாடல்கள் பதிவானது.

*மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மனோரமா டைரக்டர் ஹரி இயக்கும் ‘சிங்கம் 2’ படத்திலும், தெலுங்கு படமொன்றிலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

*கிறிஸ்தவ மதத்தில் இருந்து கடந்த ஆண்டு இந்து மதத்துக்கு மாறிய நயன்தாரா சமீபத்தில் ஈஸ்டர் பண்டிகையை நெருங்கிய நண்பர்களுடன் ஐதராபாத்தில் கொண்டாடினார்.

*‘முரண்’ பட இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கும் புதிய படத்தில் நரேன், பிரசன்னா நடிக்கின்றனர்.

*புரிஜெகநாத் இயக்கும் தெலுங்கு படத்துக்காக பாங்காக் சென்றிருக்கும் இலியானா ஷூட்டிங் முடிந்து திரும்பிய பிறகு இந்தி ‘வேட்டை’ படத்தில் நடிப்பதுபற்றி முடிவு செய்வாராம்.

Comments