Saturday, April, 14, 2012
வேட்டை வெளியான நேரம் படத்தைவிட வேட்டையை இந்தியில் ரீமேக் செய்வதைப் பற்றிதான் அதிகம் பேசினார் லிங்குசாமி. வேட்டையின் தயாரிப்பாளர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியதாகவும், இந்தியில் படத்தை எடுத்தால் நடிக்க அங்குள்ள ஹீரோக்கள் வரிசையில் நிற்பதாகவும் பில்டப் ஏற்றப்பட்டது.
இதுவொரு விளம்பர யுக்தி. ஒரு படம் வெளிவரும் முன்பே அதே இயக்குனருடன் ஹீரோ மீண்டும் இணைகிறார் என்று செய்தி வெளியிடுவது போலதான் இதுவும். இந்திக்காரர்கள் க்யூ நிற்கிறார்கள் என்றால் அப்படி என்ன படம் என்கிற ஆவல் வருமல்லவா.
ஆரம்ப ஜோருக்குப் பிறகு இந்தி ரீமேக் பற்றி லிங்குசாமி வாய் திறப்பதில்லை. வசூலாகாத மூன்றாம் தர கமர்ஷியல் படத்தை யார்தான் விரும்புவார்கள். இங்குள்ள ஹீரோக்கள் கால்ஷீட் தருவார்களா என்பதே சந்தேகம். இதில் வானம் கீறி வைகுண்டம் போவதெப்படி.
சைலண்டாக அடுத்து யாரைப் போடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் லிங்கு.

Comments
Post a Comment