அஜித் ஹாட் அண்ட் கோல்ட்!!!

Tuesday, April 10, 2012
அஜித்தின் காட்டில் ஒரே ஒரு சிங்க ராஜாதான். அந்த ஒரு ராஜாவும் அவர்தான் என்கிற கோட்பாட்டை முதன் முதலில் மாற்றிய படம் 'மங்காத்தா'. பி அண் சி ஏரியாவில் அதே வலுவுள்ள அர்ஜுனும் இருந்தார் அப்படத்தில். சொல்லி வைத்தாற்போல கலெக்ஷனும் இரு மடங்கானது. அதே யுக்தியைதான் விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கும் புதுப்படத்திலும் பின்பற்ற போகிறார்களாம். அஜித்துடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் ஆர்யா. மார்க்கெட்டில் குண்டூசி பலமே உள்ள நடிகர்கள்கூட சிலுப்பிக் கொண்டு திரியும்போது, ஆர்யா மட்டும் அந்த விஷயத்தில் டவுன் டூ எர்த். நல்ல வாய்ப்புகள் என்றால் ஈகோ பார்க்காமல் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் ஆபீசுக்கே போய் விடுவார். நான் உங்க கூட வொர்க் பண்ணணும்னு ஆசைப்படுறேன். இதோ என்னோட மொபைல் நம்பர். எப்ப வேணும்னாலும் கூப்பிடலாம் என்று மலர மலர சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். ஆர்யாவின் என்ட்ரிக்கு அஜித் சம்மதம் கொடுத்த விஷயத்திலும் இப்படி ஏதாவது நடந்திருக்கலாம். இந்த சந்தோஷமான செய்தி ஒரு புறம் இருக்க, மார்ச்... ஏப்ரல் என தள்ளிக்கொண்டே போன அஜித்தின் 'பில்லா 2' பாடல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் தேதி குறித்தபாடில்லை. இத்தனைக்கும் படத்தின் இசையமைப்பாளர் யுவன், தன் பணிகளை எப்போதோ முடித்துக் கொடுத்துவிட்டாராம். படம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் என்று கூறி வந்தவர்கள், இப்போது இன்னும் தாமதமாகும் என்று அறிவித்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தாலும் சரி, எளிமையாக நடந்தாலும் சரி, அது ரஜினியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்பதில் அஜித் பிடிவாதமாக உள்ளாராம். இன்னொரு பக்கம், 'மங்காத்தா' வெற்றியில் திளைக்கும் அஜித் ரசிகர்கள், அந்த சூடு ஆறும் முன் 'பில்லா 2' வந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஜூன் 2-ம் வாரத்தில் ஒருவேளை படம் வெளியாகலாம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறிவருகின்றனர். கடைசி நேரத்தில் இதுவும்கூட மாறலாம். ஏனென்றால் நல்ல விஷயம் எது நடந்தாலும் அதில் மூக்கை நுழைத்து முடிச்சை அவிழ்க்கதான் சில பிரகஸ்பதிகள் காத்துக் கொண்டேயிருப்பார்களே. ஆனால் ஹீரோ வழக்கம் போல அமைதி காக்கிறார். 'பில்லா 2'-ல் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். படத்தை இயக்குகிறார் சக்ரி டோலட்டி. இன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

Comments