எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களே நிஜ ஹீரோக்கள் -அஜீத்!!!

Saturday, April, 28, 2012
அஜீத்தின் பில்லா-2 படம் ரிலீசுக்கு தயாராகிறது. இப்படத்தை ரூ.28 கோடிக்கு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 1-ந்தேதி படத்தின் பாடல் சி.டி.யை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.

இப்படத்தில் ஆபத்தான ஹெலிகாப்டர் சண்டை காட்சியொன்றில் அஜீத் உயிரை பணயம் வைத்து நடித்து இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி அஜீத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை மொத்த படக் குழுவினரையும் சேரும். இந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஜெர்மன் ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டிபன் ரிச்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன ராணுவ வீரர்களை விட பெரிதாக சாதித்து விடவில்லை. ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள். என் படங்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. படம் எப்படிப்பட்டது என்று ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

நான் தேர்வு செய்யும் கதைகள் இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிடித்து இருக்க வேண்டும். மூவரையும் கதை கவர்ந்தால் தான் படம் சிறப்பாக வரும் நல்ல கதை சொல்பவர்கள் எல்லோரும் சிறந்த இயக்குனர்கள் என்று கூறிவிட முடியாது. அது போல் கதை சொல்ல தெரியாதவர்கள் கூட சிறந்த இயக்குனர்களாக இருப்பார்கள் என் அனுபவம் மூலம் இதை உணர்ந்துள்ளேன்.

இவ்வாறு அஜீத் கூறினார்.

Comments