சினிமாவுக்கு முழுக்கா? இறுதிநாள் ஷூட்டிங்கில் கண் கலங்கினார் த்ரிஷா!!!

Monday, April, 02, 2012
இறுதிநாள் தெலுங்கு ஷூட்டிங்கில் பங்கேற்ற த்ரிஷாவுக்கு பிரியாவிடை கொடுத்தபோது அவர் கண்கலங்கினார். த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். தெலுங்கு நடிகரை காதலிக்கிறார் என்றெல்லாம் சமீபகாலமாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் ‘தம்முÕ படத்தில் நடித்து வந்தார் த்ரிஷா. இப்படத்தின் கடைசிநாள் ஷூட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. ஷூட்டிங் இறுதி நாளையொட்டி பட குழுவினர் பிரியாவிடை பார்ட்டி கொடுத்தனர். இதில் த்ரிஷா பங்கேற்றார்.

அப்போது அவர் கண் கலங்கினார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடைசிநாள் ஷூட்டிங்கில் பிரியாவிடை பார்ட்டி கொடுத்தபோது பட யூனிட்டை பிரியப்போகிறோமே என்று மனதுக்கு வருத்தமாக இருந்தது. இதன் ஷூட்டிங் அவ்வளவு மகிழ்ச்சியாக நடந்தது. எந்த படத்தில் நடித்தாலும் கடைசிநாள் ஷூட்டிங் என்றால் என் இதயம் கனத்துவிடும். யாரிடமிருந்தும் பிரியாவிடை பெறுவதை நான் விரும்புவதில்லை. காரணம் சினிமாவுக்கு முடிவே கிடையாது என்றார். தற்போது த்ரிஷா ஹாங்காங்கில் நடக்கும் ‘சமரன் பட ஷூட்டிங்கில் விஷாலுடன் நடித்து வருகிறார்.

வழக்கமாக ஷூட்டிங்கின் கடைசி நாள் பார்ட்டியில் த்ரிஷா எமோஷன் ஆக மாட்டார். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. அவர் கண் கலங்கினார். திருமணத்துக்காக அவர் தயாராகி வருகிறார். அதனால் தெலுங்கில் இது அவரது கடைசி படமாக இருக்கலாம். அதனால் கண் கலங்கியிருப்பார் என பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறினார்.

Comments