Monday, April, 09, 2012
சென்னை::பேராண்மையை தொடர்ந்து அரவான் படமும் பெயர் வாங்கி கொடுத்ததில் தன்ஷிகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் நடிகைகளில் தற்போது இவர்தான் முன்னணியில் இருக்கிறார். தமிழிலேயே பேசி நடிப்பதும், தன் உயரமும் தான் எனக்கு பிளஸ் பாயிண்ட் என்கிறார் தன்ஷிகா.
அவர் மேலும் கூறியதாவது:- எனக்கு தமிழ் தெரியும் என்பதால் தான் பேராண்மை படத்தில் ஜனநாதன் சார் வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் என் கேரக்டரையும், நடிப்பையும் பார்த்து தான் வசந்தபாலன் சார் அரவான் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என்னால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சியாகவும் என்னால் நடிக்க முடியும்.
மாஞ்சா வேலு படத்தில் அப்படித்தான் நடித்திருக்கிறேன். அரவான் படத்திற்காக நிறைய ஹோம்-ஒர்க் செய்தேன். சென்னையில் வளர்ந்ததால் கிராமத்து பெண் பாடிலேங்கு வேஜ் கொண்டு வர நிறைய சிரமப்பட்டேன். அதோடு, மதுரை பாசையும் சரியாக வராமல் கஷ்டப்பட்டடேன். என்றாலும் டப்பிங் வரும் போது சரி செய்து விட்டேன்.
போட்டின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிச்ச மூணு படங்களிலேயே வெரைட்டியான ரோல் பண்ற நடிகைன்னு பெயர் கிடைச்சிருக்கு. பேராண்மையில் தைரியமான பொண்ணு. மாஞ்சாவேலுவில் ரொமான்ஸ். அரவானில் கிராமத்துப் பெண். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதனால் எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment