Friday, April 06, 2012
கொச்சி::சமீபத்தில் வெளியான, "3' சினிமாவில் இடம் பெற்றுள்ள "ஒய் திஸ்' கொலவெறி, பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என, கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தயாரித்த "3' சினிமா, கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசானது. இதில், இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலவெறி பாடல், சிறுவர்கள் மனதில் வன்முறையை தூண்டும் விதத்தில் உள்ளதாக கூறி, அந்தப்பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என, கேரளா, இடுக்கி மாவட்டம், பீர்மேடு அஞ்சல் துறையில் பணியாற்றி வரும் மாடசாமி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல
மனு தாக்கல் செய்துள்ளார்.அம்மனுவில், "இப்பாடலை கேட்கும் சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன; கேரளா மற்றும் தமிழகத்தின் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள், இந்த பாடலை விரும்பி பாடுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது' என, தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment