
நடிகர் அஜித் நேற்று இரவு திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசித்தார். மாலை பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் பெருமாள் சந்நிதிக்கு சாமி தரிசனம் செய்ய கிளம்பினார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். தேவஸ்தான பாதுகாவலர்கள் நடிகர் அஜித்தை ரசிகர்களிடம் இருந்து மீட்டு காருக்கு அழைத்து சென்றனர். அஜித் வருகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அஜித்தின் 'பில்லா 2' படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்த படத்தைத் தொடங்கும் முன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் அவர். நடிகை ஜெயசுதா, மத்திய அமைச்சர் பனபகாலட்சுமி ஆகியோரும் திருப்பதி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment