கோச்சடையான்’ படத்தில் நடிப்பது சவாலானது - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!!

Sunday, April 01, 2012
கோச்சடையான்’ படத்தில் நடிப்பது சவாலானது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி, தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்கிறார்கள். மேலும் சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், ஷோபனா, நாசர், ருக்மணி உட்பட பலர் நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். 3டியில் தயாராகும் இந்தப் படம், ஹாலிவுட் படமான ‘அவதார்’ போல, பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என்ற நவீன டெக்னாலஜியில் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது. இதற்காகப் படக்குழுவினர் கடந்த 17&ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியானது. இதில் சரத்குமார், ஷோபனா, கே.எஸ்.ரவிகுமார், ருக்மணி, நாசர், சவுந்தர்யா ஆகியோர் படம் பற்றி பேசியுள்ளனர். படத்தில் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: இது வழக்கமான படத்திலிருந்து வேறுபட்டது. இதில் நடிப்பது அவ்வளவு ஈசியானதல்ல. சவாலானது. மேக்கப், காஷ்ட்யூம் என எதுவுமில்லாமல் அந்த கேரக்டருக்குள் ஒன்றி நடிப்பது கஷ்டமான விஷயம். அதை செய்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கற்பனை பண்ண முடியாத லொகேஷனும் இந்தப் படத்தில் முக்கியமான விஷயமாக இருக்கும். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

Comments