
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்தார். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தற்போது ரிலீசாகி ஒடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்துக்கு பின் தமிழில் ஹன்சிகா மார்க்கெட் ஏறியுள்ளது. புதுப்பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதுவரை ஒரு படத்துக்கு ரூ.45 லட்சம் வாங்கினார். தற்போது அதனை ரூ.75 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
சிம்பு ஜோடியாக வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். சிங்கம், படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம்-2 என்ற பெயரில் தயாராகிறது. இதில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் டெல்லி பெல்லி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படங்களுக்கு பின் சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்துவார் என கூறப்படுகிறது. இவரை தமிழ் திரையுலகினர் குஷ்பு என அழைக்கின்றனர். குஷ்பு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
Comments
Post a Comment