கோச்சடையானில் மேலும் 4 பிரபலங்கள்!!!

Monday, April 16, 2012
'கோச்சடையான்' படத்துக்கு 4 பாலிவுட் நடன இயக்குநர்கள் நடனம் அமைக்கிறார்கள் என்றார் இயக்குநர் சவுந்தர்யா. ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' ஷூட்டிங் சமீபத்தில் லண்டனில் தொடங்கியது. இதில் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். மோஷன் கேப்சர் முறையில் இதன் ஷூட்டிங்கை சவுந்தர்யா படமாக்கி வருகிறார். இப்படத்தின் ஸ்டார் அந்தஸ்து நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதுபோல் பிரபல டான்ஸ் மாஸ்டர்களும் இதில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சரோஜ் கான், ராஜு சுந்தரம், சின்னி பிரகாஷ், ஷோபி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். இதுபற்றி சவுந்தர்யா கூறும்போது, 'சரோஜ் கான், சின்னி பிரகாஷ், ராஜு சுந்தரம், ஷோபி ஆகிய பிரபலமான 4 நடன மாஸ்டர்களுடன் பணியாற்றுவது வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதற்காக கடவுளுக்கு நன்றி' என்றார்.

Comments