
கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தந்து எங்களை ஒதுக்குவதா? என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது 2 ஹீரோயின்கள் கோபம் அடைந்தனர். ராம்கோபால் வர்மா இயக்கும் படம் ‘டிபார்ட்மென்ட்’. இதில் அஞ்சனா சுகானி, லட்சுமி மன்சு, நாதாலியா கவுர் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் புரமோஷனில் அஞ்சனா, லட்சுமி இருவரையும் ஓரம்கட்டிவிட்டு கவர்ச்சி நடிகை நாதாலியா கவுருக்கு வர்மா முக்கியத்துவம் தருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஞ்சனா, லட்சுமி இருவரும் இயக்குனர் மீது கோபமாக இருக்கிறார்கள், ‘இதுபழிவாங்கும் செயல்’ என்று லட்சுமி மன்சு கூறியதாக தகவல் வெளியானது.
இதுபற்றி மன்சுவிடம் கேட்டபோது, ‘‘இது வர்மாவின் படம். அவருடைய படத்தை எப்படி புரமோஷன் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் படத்தில் நடித்தது சந்தோஷம். இன்னும் சொல்லப்போனால் அவர் படத்தில் நடித்தது பெருமை. ராம்கோபால் வர்மாவைவிட வேறு யாரும் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை கவுரவமாக நடத்த மாட்டார்கள். தற்போது தமிழ், தெலுங்கில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறேன். ஆந்திராவின் உட்புற பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. டாப்ஸி, சுதீப் கிஷன் மற்றும் ஆதி நடித்துள்ளனர். 1986ம் ஆண்டு கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நடந்த முக்கிய சம்பவமொன்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது’’ என்றார்.
Comments
Post a Comment