
சிங்கம் என்று அதே பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது படம். பாலிவுட்டிலும் படம் ஹிட்டானது. அதில் அஜய் தேவ்கன் - காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.
அடுத்து தமிழில் சிங்கம் படத்தின் பார்ட்-2வில் ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க இருக்கிறார். சிங்கம் படத்தின் ரீம் அனைவரும் இதில் மீண்டும் இணைகிறார்கள்.
அனுஷ்காவுடன் ஹன்சிகாவும் சேர்ந்து ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தளிக்க இருக்கிறார். விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர் ஆகியோருடன் ரகுமான் மற்றும் பல கதாபாத்திரங்கள் இணைய உள்ளனர். காமெடிக்கு கூடுதலாக சந்தானமும் களமிறங்குகிறார்.
சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஹைத்ராபாத் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படபிடிப்பு நடக்க இருக்கிறது. இயக்குனர் ஹரி முதல் முறையாக பாடல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்க இருக்கிறாராம்.
முதல் பாகத்தில் ஆட்டம் போடும் இசையக் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இதற்கும் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
சிங்கம் படத்தின் முதல் பாகத்தை விட சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஒரு லட்டு திண்ணவங்க ரெண்டாவது லட்டுக்கு ஆசைப் படுவது சகஜம் தானே!
Comments
Post a Comment