Saturday, April, 21, 2012
'பில்லா-2' படத்தில் எதிர்பார்த்ததை காட்டிலும் சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டினார் என்று அப்படத்தின் சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கெச்சா கம்பாக்டி கூறியுள்ளார். அஜித்தின் 'பில்லா' படம் வெற்றி சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அதன் 2-ம் பாகமாக 'பில்லா-2' உருவாகி வருகிறது. 'உன்னைப்போல் ஒருவன்' டைரக்டர் சக்ரி டோலெட்டி இப்படத்தை இயக்குகிறார். அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'பில்லா-'வை காட்டிலும் 'பில்லா-2'வில் மிரட்டலான சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர். சமீபத்தில் யூ-ட்யூப்பில் வெளியான இப்படத்தின் டிரைலர் அனைவரையும் வியக்கத்தக்க வகையிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்களுக்கு சமமாக மிரட்டலான சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இதுகுறித்து இப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைத்து கொடுத்த ஜயிக்கா ஸ்டன்ட் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கெச்சா கம்பாக்டி கூறுகையில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான சண்டைக்காட்சிகள் 'பில்லா-2'வில் இடம்பெற்று இருக்கிறது. அப்படி மிரட்டலான சண்டைக்காட்சிகளை அமைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல, அதற்கு படத்தின் ஹீரோவின் முழு ஒத்துழைப்பும் அவசியம். 'பில்லா-2' சண்டைக்காட்சிகளில் அஜித் பிரமாதமாக நடித்து கொடுத்தார். அதிலும் குறிப்பாக வித்யூத் ஜமாலுடன் அவர் மோதும் சண்டைக்காட்சிகள் ரொம்பவே மிரட்டலாக வந்திருக்கிறது. ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி படமாக்கியது ரொம்பவே சவாலாக அமைந்தது. அங்கு அதிகப்படியான பனிபடர்ந்து காணப்பட்டதால் ஷூட்டிங் நடத்த சிரமமாக இருந்தது. படத்தில் 75 சதவீத காட்சிகள் படமாக்கிவிடுவோம். திடீரென பனிபடர்ந்து விடும். இதனால் திரும்பவும் அந்தக்காட்சியை படமாக்குவோம் என்றார்.
டைரக்டர் சக்ரி டோலெட்டி பற்றி கெச்சா கூறுகையில், திறமையான டைரக்டர் சக்ரி. எந்த ஒரு காட்சியும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் நினைத்தபடி காட்சிகள் வர வரைக்கும் அதில் திருப்தி அடையமாட்டார். படப்பிடிப்பில் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார். அதனால் நாங்க நினைத்தபடி சண்டைக்காட்சிகளை அமைக்க முடிந்தது. அதற்காக அவருக்கு என் சார்பாகவும், எனது குழுவினர் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 'பில்லா-2' படம் மூலம் எங்களுக்கு நிறைய நட்பு வட்டாரம் கிடைத்திருக்கிறது. மீண்டும் சக்ரியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாய் இருக்கிறோம். அஜித் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அஜித் ரொம்ப ஆற்றல் மிக்கவர், பண்புள்ளவர், மரியாதை மிக்கவர், மற்றவர்களுடன் எளிதாக பழகும் நல்ல நண்பர். ஏற்கனவே அஜித்துடன் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. எதையும் துணிந்து செய்யவும், அதற்கான முயற்சி மற்றும் ஆர்வம் அஜித்திடம் அதிகம் இருப்பதால், அவரை வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்க எங்களுக்கு ஈசியாக அமைந்தது. நாங்கள் நினைத்ததை காட்டிலும் அஜித் பிரமாதமாக சண்டைக்காட்சிகளில் நடித்து படக்குழுவினரையே மிரட்டிவிட்டார். தொடர்ந்து இந்திய மற்றும் தமிழ் படங்களில் பணியாற்ற ஆர்வமாய் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். ரொம்ப ஷார்ப்பா செதுக்கியிருக்கீங்களே..... ம்ம்ம் கலக்கிட்டீங்க டேவிட்!

Comments
Post a Comment