2015 வரை கார்த்தியை நெருங்க முடியாதா?!!!

Saturday, April, 14, 2012
அடாத பெப்சி வேலை நிறுத்தத்திலும் விடாத மழைபோல நடந்து கொண்டிருக்கும் மாஸ் ஹீரோ படப்பிடிப்புகளில் கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்'தான் ரொம்ப ஹாட்! படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் பத்து செக்யூரிட்டிகளுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருந்தார்கள். தற்போது வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட பிறகு நேற்று முதல்தான் இந்த சபாரி சூட் மனிதர்களை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் கார்த்தியின் கால்ஷீட்டுக்காக ஆளாய் பறக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்! முக்கியமாக ஏ.வி.எம் நிறுவனம் 'நீங்கள் எங்களுக்கு இன்னும் படம் பண்ணவில்லையே?' என்று நச்சரித்து வருகிறார்களாம் கார்த்திக்கு. அடுத்து கார்த்தியின் கால்ஷீட்டுக்கு இப்போதே பிட்டைப் போட்டு வைத்திருக்கிறாராம் டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவரான ராஜமௌலி. இதற்கிடையில் பள்ளி பருவத்தில் இருந்து உயிர் நண்பனாக இருக்கும் வளர்ந்து வரும் தொழில் அதிபர் ஒருவருக்கும் படம் நடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கார்த்திக்கு அடுத்து வர இருக்கும் அசத்தலான அரசியல் நையாண்டி ஆக்ஷன் த்ரில்லர் படம் 'சகுனி'! அடுத்து சுராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'அலெக்ஸ் பாண்டியன்'. இந்தப் படத்தை தொடர்ந்து காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர் ராஜேஷின் முழுநீள ரொமாண்டிக் காமெடிப் படம். அதைத்தொடர்ந்து ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி, 'தோனி' படத்தில் அறிமுகமான ராதிகா ஆப்டே. இதுதவிர தெலுங்கில் நேரடியாக இரண்டு படங்கள் என கார்த்தியின் கால்ஷீட்டை 2015 வரை நெருங்க முடியாது என்கிறார்கள்.

Comments