துபாயில் நடந்த 'செம சிங்கர்' 2012: பாடகர் மாணிக்க விநாயகம் பங்கேற்பு!

Wednesday,April,04,2012
துபாய்::துபாயில் ரேடியோ ஹலோ 89.5 எப்எம்முடன் இணைந்து ஸ்மைல் இவென்ட் செமசிங்க‌ர் 2012 எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியை 30.03.2012 அன்று மாலை துபாய் அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌ட‌த்திய‌து.

மார்ச் 23 ம‌ற்றும் 24 ஆகிய‌ நாட்க‌ளில் கராமா சென்ட‌ரில் 5 முத‌ல் 15 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இடையே ந‌டைபெற்ற‌ செம‌ சிங்க‌ர் 2012 நிக‌ழ்வின் துவ‌க்க‌ச் சுற்றிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட 15 பேரில் கார்த்திக் குமார், ஸ்ருதி ஸ்ரீநிவாஸ் ச‌க்ர‌வ‌ர்த்தி, ஸ்ருதி சுத‌ர்ச‌ன் ச‌க்ர‌வ‌ர்த்தி, பொன் ச‌விதா, த‌க்ஷின‌ இள‌ங்கோ ஆகிய 5 பேர் சிறந்த பாடகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சினிமா பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தேர்வு செய்தார்.

அத‌னைத் தொட‌ர்ந்து மாணிக்க‌ விநாய‌க‌ம் த‌ன‌து பாட‌ல்க‌ள் மூல‌ம் ர‌சிக‌ர்க‌ளை ம‌கிழ்வித்தார். பாவை நியாஸ் ந‌கைச்சுவை துணுக்குக‌ளை வ‌ழ‌ங்கினார்.

சிற‌ப்பிட‌ம் பெற்ற‌ பாட‌க‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ்க‌ளை ரேடியோ ஹ‌லோ 89.5 எப்.எம்மின் ச‌திஷ் ம‌ற்றும் அசோக‌ன் வ‌ழ‌ங்கின‌ர்.

சுரேஷ் த‌லைமையிலான‌ குழுவின‌ர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த‌ன‌ர்.

Comments