15 வருடத்துக்கு பிறகு இந்தியில் ‘பாட்ஷா’!!!

Monday, April, 02, 2012
ரஜினி நடித்த ‘பாட்ஷா’ 15 வருடத்துக்கு பிறகு இந்தியில் டப்பிங் ஆகிறது. ரஜினி நடித்த படம் ‘பாட்ஷா‘. சுரேஷ்கிருஷ்ணா இயக்கம். தேவா இசை. 15 வருடத்துக்கு பிறகு இந்தியில் டப்பிங் ஆகி உள்ளது. இதுகுறித்து சுரேஷ்கிருஷ்ணா கூறியதாவது: 15 வருடத்துக்கு முன்பு அமிதாப்பை வைத்து பாட்ஷா ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு அவருக்கு திரையிடப்பட்டது. நடிக்க ஒப்புதல் அளித்தார். பிறகு அவர் அரசியலில் ஈடுபாடு காட்டியதால் ரீமேக் செய்வது தாமதமானது. பிறகு அவரே படத்தை டப்பிங் செய்ய யோசனை கூறினார். அது இப்போது நிறைவேறி இருக்கிறது.

தற்போது புதுநெகட்டிவில் கலர் ரெஸ்டோரேஷன் செய்து, 5.1 டிஜிட்டல் ஒலிக்கு இசை மாற்றப்பட்டது. புதிதாக டைட்டில் இசை அமைத்திருக்கிறார் தேவா. வசனம் கோபால்ராம், இன்தீவர். டப்பிங் தயாரிப்பு பிரசாத். டி.வி.நடிகர் ஆதேஷ் கவுதம் ரஜினிக்கு டப்பிங் பேசினார். இம்மாத இறுதியில் 1000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு சுரேஷ் கிருஷ்ணா கூறினார். படத்தின் டிரைலர் நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. அங்கு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். பிறகு அவர்களுக்கு படம் திரையிடப்பட்டது.

Comments