
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு நேற்று 12-வது திருமண நாள். நடிகை ஷாலினியும், அஜித்தும் 'அமர்க்களம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷாலினியைக் கரம் பிடித்தார் அஜித். காட்டாற்று வெள்ளமாக இருந்த அவர் வாழ்க்கை அதன் பிறகு ஒரு கட்டுக்குள் வந்தது. திருமணத்துக்குப் பின்னர்தான் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். மிகுந்த பக்குவப்பட்ட மனிதராக மாறினார். பேச்சைக் குறைத்துக் கொண்டு, தன் வேலைகளில் கவனம் செலுத்தினார். அவரது படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக ஓடுகின்றன. 'பில்லா', 'மங்காத்தா' ஹிட் படங்கள் வரிசையில் அடுத்து 'பில்லா-2' வர இருக்கிறது. இவர்களுக்கு 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர். தனது திருமண நாளை மனைவி, குழந்தை, குடும்பத்தினருடன் சென்னையில் கொண்டாடினார் அஜித். அவருக்கு நண்பர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Comments
Post a Comment