ரூ.1 கோடி சம்பளம் கேட்டேனா? தமன்னா பதில்!!!

Saturday, April, 28, 2012
புது படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்டு வாங்கியதாக வந்த தகவல் பற்றி பதிலளித்தார் தமன்னா. அவர் கூறியதாவது: இப்போது தெலுங் கில் நடித்து வரும் 2 படங்களை தவிர புது படங்கள் எதுவும் ஏற்கவில்லை. இதற்கிடையே ஒரு படத்துக்கு நான் ரூ.1 கோடி வாங்கியதாக தகவல் பரவியுள்ளது. இதில் துளியும் உண்மை கிடையாது. ஏதேனும் ஒரு படத்துக்கு அதுபோல் சம்பளம் வாங்கியிருந்தால் மீடியாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில் யாரும் என்னிடம் இதுபோல் கேள்வி எழுப்பியிருக்க மாட்டீர்கள்.

இந்தியில் நடிக்கப்போவதாகவும் நிறைய தகவல் வருகிறது. சில வாய்ப்புகள் வருவது உண்மைதான். இடைவெளி இல்லாமல் இப்போது கால்ஷீட் கொடுத்துவிட்டு நடித்து வருகிறேன். இதற்கிடையே இந்தியில் நடிக்க கால்ஷீட் உடனே ஒதுக்க முடியாது. அதற்காக நேரம் எடுத்து நான் தயாராக வேண்டும். இந்தியில் அறிமுகமானவள்தான் நான். இனி இந்தியில் நடிக்க வேண்டுமானால் அது பெரிய படமாக இருக்க வேண்டும். யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை எனக் கேட்கிறீர்கள். தமிழ், தெலுங்கில் பல நடிகர்களுடன் இதுவரை நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன். குறிப்பிட்டு ஒரு நடிகருடன்தான் நடிப்பேன் என சொல்ல மாட்டேன்.

Comments