தீரா தாகம் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்: ஸ்ருதி!!!

Monday, March 05, 2012
என்னை அனைவருமே கமல ஹாசனின் மகளாகத் தான் பார்க்கின்றனர். அதை மாற்றவே முயற்சி செய்து வருகின்றேன் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவில் சூர்யா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தற்போது அவரும், தனுஷும் நடித்துள்ள 3 படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அவர் என்ன தான் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்தாலும் அனைவரும் அவரை கமலின் மகளாகத் தான் பார்க்கிறார்களாம். இது தான் அவருக்குப் பிடிக்கவில்லை.

இது குறித்து ஸ்ருதி கூறியதாவது,

அனைவருமே என்னை கமல் மகளாகத் தான் பார்க்கிறார்கள். அதை மாற்றத் தான் நான் முயற்சி செய்து வருகிறேன். கமல் மகளாக இருந்ததால் எனக்கு எளிதில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள திறமை வேண்டும். திறமை இல்லையென்றால் திரையுலகில் நிலைத்து நிற்க முடியாது. அனைவரும் என்னை ஒரு நடிகையாக பார்க்க வேண்டும்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் எதிலும் திருப்தியடையக் கூடாது. அடுத்து அடுத்து என்று தீராத தாகம் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்றார்.

கலைஞானியின் மகளாச்சே, இப்போதே ஞானத்துடன் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறார்...

Comments