Wednesday,March,21,2012
படங்களுக்கு தலைப்பு வைப்பதில் பாலாவின் பாணியே அலாதி. யாரும் எதிர்ப்ப்பார்க்காத தலைப்பை சூட்டுவது அவர் வழக்கம்.
நான் கடவுள் முடிந்த பிறகு ஒரு முறை அவரைச் சந்தித்தபோது, 'உங்க அடுத்த படம் தலைப்பு என்ன?' என்றோம்.
அவன் இவன்னு வெச்சுக்கலாமா? என்றார் தமாஷாக. சில நாட்கள் கழித்துப் பார்த்தால் அதுதான் தலைப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த முறை இன்னும் ஒருபடி மேலே போய், பரதேசி என்ற பேச்சு வழக்கு சொல்லை தலைப்பாக்க முடிவு செய்துள்ளாராம் பாலா.
மலையாளத்தில் வெளியான எரியும் பனிக்காடு என்ற நாவலை பாலா இந்த முறை படமாக்குவதாகத் தெரிகிறது. இதே தலைப்பை அவர் பயன்படுத்தக் கூடும் என சொல்லப்பட்டது. ஆனால் பாலா இப்போது தலைப்பை மாற்றுகிறாராம்.
பரதேசி என்ற பெயர் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று பாலா கருதுகிறாராம். பரதேசி என்றால் தமிழில் உயர்ந்த அர்த்தங்கள் உண்டு. தனக்கென ஒரு நிரந்தர இடம் இல்லாதவன், அனைத்தையும் தன் தேசமாகவே கருதுபவன் என்றெல்லாம் ஏகப்பட்ட அர்த்தங்கள். ஆனால் பேச்சு வழக்கில் இந்த சொல் இழிவாகத் திட்ட பயன்படுத்தப்படுகிறது.
இதுதான் இறுதியா என்பது உறுதியாகத் தெரியாது. பாலாவே அறிவித்தால்தான் உண்டு.
படத்தில் அதர்வா, வேதிகா ஜோடியாகவும், முக்கிய பாத்திரங்களில் பூஜா, உமா ரியாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
பாலாவின் பரதேசியில் அதர்வா!!!
இருட்டில் உள்ள நிஜங்களை படம் பிடித்து காட்டும் பெருமை பாலாவையே சாரும். தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் வரிசையில் உள்ள பாலா அடுத்து எடுக்கவிருக்கும் படத்திற்கு எரியும் தணல் என்று பெயர் வைத்திருந்தார்.
ஆனால் தற்போது அப்பெயரை மாற்றி பரதேசி என்று வைத்துள்ளார். தனது கதைக்கு இந்த பெயர்தான் மிகச் சரியாக பொருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் அதர்வா - வேதிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் திரைக்கதையில் எழுத்தாளர் ஜெயமோகன் உதவி செய்கிறார். இவர் ஏற்கனவே நான் கடவுள் படத்தில் பாலாவிற்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், பாலாவின் படத்திற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment