தடை சம்பவத்தால் எதையும் எதிர்க்க துணிந்தேன் : நிகிதா!!!

Monday, March 5, 2012
சென்னை::தர்ஷன் விவகாரத்தில் நடிக்க தடை விதிக்கப்பட்ட பின் எதையும் எதிர்கொள்ள துணிச்சல் வந்துவிட்டது என்றார் நடிகை நிகிதா. கன்னட நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் சில மாதங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. தர்ஷனுடன் ஹீரோயின் நிகிதா தொடர்பு வைத்திருப்பதுதான் கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் நிகிதாவுக்கு கன்னட படத்தில் நடிக்க தடை விதித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகு நிகிதா பிரபலம் ஆனார். தமிழில் Ôமுரண்Õ படத்தில் நடித்த அவர் தற்போது கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் நடிக்கிறார். நிகிதா கூறியதாவது: செய்யாத தவறுக்காக நான் தண்டிக்கப்பட்டேன். இது என்னை துணிச்சல்மிக்கவளாக மாற்றிவிட்டது. எந்த பிரச்னையையும் இனி தைரியமாக எதிர்கொள்வேன். கன்னட பட தயாரிப்பாளர்கள் சங்கம் என் மீது வலுக்கட்டாயமாக எடுத்த முடிவால் தேசிய அளவில் மீடியாக்களின் கவனத்தை கவர்ந்துவிட்டேன். திரையுலகம் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

ஷூட்டிங்கில் இருக்கும்போது எப்போதும் நடிப்பின் மீதே கவனமாக இருப்பேன். 200 சதவீதம் எனது ரோலை நிறைவு செய்ய முயல்வேன். மற்ற எந்த விஷயத்திலும் ஈடுபாடு காட்ட மாட்டேன். ஏற்கனவே நடந்தவற்றை பற்றி மீண்டும் ஆராய்ந்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தை பற்றித்தான் இனி யோசிப்பேன். இவ்வாறு நிகிதா கூறினார்.

Comments