Saturday, March, 31, 2012
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டை மன்னன்’ ஒரு கேங்ஸ்டர் படமாகும். மிகவும் பொருட்செலவில் தயாராகி வரும் இதில் சிம்பு-வுக்கு மூன்று ஜோடிகள். மன்மதன், வல்லவன் படங்களில் சிம்புவுடன் பணியாற்றிய நெல்சன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி மற்றும் தீக்சா சேத் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் சிம்புவும் தீக்சா சேத் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் பிரேசில் நாட்டில் தொடங்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெய் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானம், ஒஸ்தி படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் படம் என்பதால், இப்படத்திற்கு அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Post a Comment