
சினிமாப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதித்து மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது எனக் கூறி, இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என கேட்டு, டெல்லி உயர்நீதி மன்றத்தில் பிரபல இந்திப் பட அதிபர் மகேஷ் பட் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ராஜீவ் சக்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறு மகேஷ் பட் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில், இந்த வழக்கு குறித்து பதில் மனுதாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதிகள் ஜுலை மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments
Post a Comment