Saturday, March, 31, 2012
இந்தியாவின் தலைசிறந்த திரைப்படக்கல்லூரிகளில் ஒன்று புனேவில் இருக்கிறது. இங்கேதான் நம்ம கேமரா கவிஞர் பாலுமகேந்திரா படித்தார். அப்படிப்பட்ட புனேவில் சூர்யாவுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? 'மாற்றான்' படத்தின் ஒன் அண்ட் ஒன்லி டூயட்டை கடந்த 23-ம் தேதி தொடங்கி இங்கேதான் ஷூட் செய்து கொண்டிருக்கிறார் நம்ம கே.வி ஆனந்த். ஏனாம்? எல்லாம் சென்டிமென்ட் மச்சி என்று நம் காதை கடிக்கிறார்கள் படத்தின் புரடெக்ஷன் மேனேஜர்கள். அதாகப்பட்டது! மொட்டை பாஸ் ரஜினி கலக்கிய ஷங்கரின் 'சிவாஜி' படத்தில் இடம்பெற்ற 'பல்லேலக்கா பல்லேலக்கா' பாடலை படம் பிடித்த அதே லொக்கேஷன்களில் சக்ஸஸ் சென்டிமெண்ட்டாக இருக்கட்டும் என்று சூர்யாவையும் காஜல் அகர்வாலையும் இங்கே அழைத்து வந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஒரு பாடலுக்கான ஷெட்யூல் மட்டுமே பத்து நாட்கள். 'மாற்றான்' படத்தில் இடம்பெரும் வசனக்காட்சிகளை மொத்தமாக முடித்து விட்ட இயக்குநர் அடுத்து திட்டமிட்டு இருப்பது வெளிநாட்டு பாடல் காட்சிகளை. விசா கிடைப்பதைப் பொறுத்து சுவிஸ் அல்லது கே.வி. ஆனந்தின் ஃபேவரைட் லொக்கேஷனான அந்தமான் நிக்கோபாரில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறது 'மாற்றான்' படக்குழு! சென்டிமெண்ட்டு, ஃபேவரிட்டுனு அலைய வைக்காம சட்டுபுட்டுனு பாட்ட எடுங்க பாஸ்........

Comments
Post a Comment