நண்பனை வெட்டிய வேட்டை மன்னர்!!!

Saturday, March, 31, 2012
கவுண்டர் தன் வீட்டில் காலை நீட்டி ஹாயாக படுக்க ஆரம்பித்த பிறகுதான் வடிவேலுவின் கால்(ஷீட்) ஓட ஆரம்பித்தது. அதன்பின் வடிவேலுவின் ரெஸ்ட் நேரம் அரசியல் என்ற தேள் கொடுக்கினால் வந்தது. ஹாயாக அவர் காலை நீட்டியதும் சந்தானம் ஓட ஆரம்பித்தார். கவுண்டருக்கும், வடிவேலுவுக்கும் வந்த அந்த பொல்லாத கெட்ட நேரம் சந்தானத்திற்கும் வரும்போல தெரிகிறது. ('நண்பன்' சத்யனை பார்த்தவர்கள் ஏற்கனவே அது வந்தாச்சு என்று கூவுவது கேட்கிறதா?) சிம்புங்கிற பெரிய மனுசன் தண்ணி ஊத்தலேன்னா இந்த செடி வளர இன்னும் டைம் பிடிச்சிருக்கும் என்று அவ்வப்போது சிம்புவின் மனசை தண்ணீரால் பதப்படுத்திக் கொண்டே வந்தார் சந்தானம். இப்போது அதே தண்ணீரில் ஒரே பிளிச்சிங் பவுடர் வாசனை வீச ஆரம்பித்திருக்கிறதாம். இருவருக்குள்ளும் நடக்கும் பனிப்போரில் சிம்புவால் கழற்றிவிடப்பட்டிருக்கிறார் திருவாளர் சந்தானம். 'வேட்டை மன்னன்' படத்திற்கு பிட் பிட்டாக கால்ஷீட் கொடுத்திருந்தார் சந்தானம். அழைத்தபோதெல்லாம் வந்துவிட்டு போக இவர் என்ன வையாபுரியா? பிஸியான ஆளேச்சே. சிம்பு ஷூட்டிங்கிற்கு அழைத்த தினத்தில் வேறொரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தாராம் அவர். தனது கால்ஷீட்டை பிரித்துக் கொடுக்க முடியாதளவுக்கு தவித்துப் போனார் சந்தானம். எப்படியோ தட்டு தடுமாறி சிம்புவிடம் விஷயத்தை சொல்ல, இனிமேல் என் படத்தில் நீயில்லை என்று தெள்ளந்தெளிவாக கூறிவிட்டார் சிம்பு. இப்போதெல்லாம் நொடி முள் ஒவ்வொரு முறையும் கட்டிங் பிளேயராக நகர்கிறதாம் சந்தானத்திற்கு.

Comments