
சென்னை::தமிழில் நல்ல சைஸாக இருந்தால்தான் ரசிப்பார்கள். இதுவே இந்தி என்றால் சைஸ் ஜீரோதான் அழகு. அசினின் தோற்றம் இன்னும் சைஸ் ஜீரோவுக்கு வரவில்லை. வாய்ப்புகள் வழுக்கிப் போக இதுதான் காரணமோ என்று அவருக்கு ஐயம். விளைவு?
முன்பைவிட இளைத்து ஏழுநாள் படுக்கையில் கிடந்தவரைப் போல் காட்சியளிக்கிறார். இந்தப் புதிய தோற்றம் அவருக்கு உற்சாகத்தை தந்தாலும் அவரது ரசிகர்கள் அழகு எடை குறைஞ்சுப் போச்சே என்று கவலைப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒல்லிப்பிச்சானாகிவிட்டார். சமீபத்தில் நடந்த ஜெனிலியாவின் திருமணத்தில் பலருக்கு அசினை அடையாளம் தெரியவில்லை.
இந்தத் தோற்றத்தை கொண்டு வர டயட் எல்லாம் இருக்கவில்லை, கொழுப்பு நீக்கும் சிகிச்சைதான் எடுத்துக் கொண்டார் என்று கிசுகிசுக்கிறது பாலிவுட். கொழுப்பு குறைவது நல்லதுதானே.
Comments
Post a Comment